உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

சிவாஜினி சிறிதரன்

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம் 113 பசுமை பசுமை நிறைந்த நினைவுகள் பாடி களித்த காலங்கள் பழகிகளித்த உடன் பிறப்புக்கள் பிரிந்து சென்றோம் இயற்கை அன்னையவள் இதமாய் பூமிக்கு பசுமை ஆடையை போர்த்தி அழகு பார்க்கின்றாள் சாமத்தில் சாரல் மழை பெய்து வெப்பத்தை தணிக்குது வெண்கதிருக்கு பன்னீர் தெளிக்குது வியர்வையில் நனைந்து செங்குருதி சிந்திய விவசாயி விதம் விதமாய் விளைவிக்கும் கோதுமை சோளம் பசுமையின் கோலம் கண்ணுக்கு விருந்து உடலுக்கு உணவு மனதுக்கு மகிழ்வு!! வனவளத்தை பாதுகாப்போம் பசுமையை பேணுவோம் பசுமை உலகை ஆள்வோம் வெப்பத்தை தணிக்க உழைப்போம்!! நன்றி சிவாஜினி சிறிதரன்