உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

27.06.23 கவி இலக்கம்-107 பசுமை அகலாத ஞாபகங்கள் ஆழமாய் விரிய எமக்குள் ஆயிரமாயிரம் பெருமூச்சில் துடிப்பு பசுமை நினைவுகளின் வாசம் சோர்ந்தவரை உசுப்பி எழுப்பும் பூரிப்பு துள்ளித் திரிந்த காலம் பள்ளியில் செய்த குறும்பு இலாச்சியில் பொரி விளாங்காய் ஒளிச்சு வைத்து உண்ட சுவைப்பு நாவற்பழம் தின்று வெள்ளைச் சட்டையை கத்தரிப்பு நீலம் கறையாக்கிய சிரிப்பு தென்னை மரப் பொந்தில் ஒளித்திருந்த கிளிகள் பச்சை மிளகாய் கொத்தி உண்ணும் துடிப்பு அம்மே அம்மே எனக் கத்தியபடி பிறந்த உடனே தெத்தித் தெத்திப் பின்னால் துரத்தும் ஆட்டுக் குட்டி நடிப்பு கோழிக் குஞ்சுக்கு குங்குமச் சாயம் பூசிக் கழுகுப் பார்வையில் இருந்து தப்பிக்க வைத்த சோடிப்பு பச்சைப் பசேலாய் மனக் கண்ணில் அசைந்து நடனமாடும் நெல் வயலும் தென்னஞ் சோலையும் மறக்கவே முடியாத அன்றைய பூரிப்பான பசுமை நினைவுகளே