உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

30.05.23 கவி இலக்கம்-104 மூண்ட தீ பார் போற்றிய யாழ் நூலகம் பன்னிரண்டு மணிக்குத் தீ மூண்டதே பேர் ஆற்றிய தமிழ் வேரோடு எரிய என்ன பாவம் செய்ததே வரம் பெற்ற வரலாற்று நூல்கள் ஏன் என ஏங்கிக் கொண்டதே மூண்ட தீ கண்ட எழுபத்தி நாலு வயது தாவீது அடிகளார் மூச்சு மாரடை்பால் நின்றதே பண்டைய பனையோலை கொண்ட அடிச்சுவடு,ஆதார ஆவணங்கள் எரிந்து சாபம் பூண்டதே அழிக்கத் தெரிந்தவனை ஒழிக்க அவன் உதிரமே விழிப்புணர்வோடு முழித்துக் கொண்டதே எரிந்த சாம்பலில் பிரிந்த தீப்பொறியில் மூண்டதீ கவிண்டு போன அரசியலில் கொழுந்துவிட்டு எரியவே துவண்டு போன வலிகள் தூரவே நின்று இரண்டு கைகளும் தட்டி மூண்ட தீ கண்டு மகிழ்கிறதே.