உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

நாதன் கந்தையா 16.5.23

நாதன் கந்தையா 16.5.23

பெற்றவள். ------------------------- மீண்டு புவிமீது வெண்மதியாய் வலம்வந்து கூண்டாய் மடியிருத்தி கோதி முலையூட்டி வானைப்போல் வளியைப்போல் - என் வலம் இடம் அறிந்தவளே. விஞ்ஞானம் மெய்ஞானம் எஞ்ஞானம் என்றாலும் உன் ஞானம் ஒன்றேதான்- என் உள் நெஞ்சுள் ஓங்காரம் ஆனவளே. மெல்லத்திருவாகி மேவி நின்ற பொற்பதமே. மண்ணில் நடைபயின்ற மாலை குளிர் காற்றே மலராய் சந்தனமாய் -என் மண்டைக்குள் மணப்பவளே. தண்ணீருள் கலந்த பிராணன்போல் என்னுயிரில் பின்னி பிணந்துவிட்ட பெரும்பேறே பொக்கிசமே. மூலம் நீயானாய் முழுவதுமே நீதானே காலத்தும் கடைசிவரை காணிக்கை இல்லாமல் காட்சி தந்த கலைமகளும் நீதானே தாயே தலை மகளே தாள் பணிந்தேன் என்னுயிரே. -நாதன் கந்தையா-