உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

சக்தி சக்திதாசன்

சக்தி சக்திதாசன்

காணிநிலம் தேடித்தேடி நாணிடும் வகையிலெம் பேணிடும் அமைதியை வீணடிக்கும் மாந்தர் உதிக்கின்ற வேளையும் உதிர்கின்ற வேளையும் உணரமுடியா திருந்தும் உண்மையை மறந்தனர் இருக்கின்ற செல்வம் இரந்துண்டு வாழ்வதை இதயத்தில் கொண்டிவர் இயங்கிட மறந்திட்டாரே ! போதுமெனும் மனது போதாது என்றேயிவர் பொதுவுடை காணிநிலமும் பெற்றிட ஆவலிலுளைவர் நீர்க்குமிழியெம் வாழ்க்கை நிம்மதி ஒன்றையேதேடி நீக்குவோம் பேராசையை நாடுவோம் நல்வழிகளை சக்தி சக்திதாசன்