உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஜெயம் தங்கராஜா

ஜெயம் தங்கராஜா

https://linksharing.samsungcloud.com/kYJ4tgv0N3uN சசிச விடியல் இன்னும் மாதர்க்கு வரவில்லை விடியல்  பெண்களின் வாழ்க்கையின்னும் ஆண்களின் பிடியில் மண்ணிலே சிலரின்னும் அரக்கர்கள் வடிவில் இன்றும் உரிமைகளில்லை என்பதாக முடிவில் பாட்டிலே மானே தேனேயென புழுகிடுவார் ஏட்டிலே புகழ்ந்து போற்றி எழுதிடுவார் வீட்டிலே அடங்கி வாழும் பிறவியானாள் கூட்டிலே அடைபட்டுக் கிடக்கும் பறவையானாள் கேளடி பெண்ணே நீயுன்னையே புரிந்தால் ஏழடியாகும் இமயமும் நீ நிமிர்ந்தால் ஆளப் பிறந்த பூலோகத்தின் ஜென்மம் வாழப் பயந்து ஏங்குவதுமேன் இன்னும் நிலவென்பார் மலரென்பார் சிலையென்பார் மயங்கிடாதே அழகென்பார் அமுதென்பார் அவர்கழுக்கு இடங்கொடாதே அளவில்லா பொய்யுரைப்பார் உணர்வுகளுள் உடைந்திடாதே உளத்திலுள்ள நம்மிக்கையை எந்நாளும் கைவிடாதே புதுமைப்பெண் என்பதுவும் சொல்லளவில் மட்டும் பதுமையவள்  உளக்குமுறல் யார்செவிக்கு எட்டும் இதுவரையில் கிடைக்கவில்லை சரிக்குச்சரி உரிமை எதுவரைக்கும் சுமப்பாளோ பேதையவள் சிலுவை. ஜெயம் 20-03-2023