உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஜெயம் தங்கராஜா

ஜெயம் தங்கராஜா

https://linksharing.samsungcloud.com/zOCXxYMWgSGu எம் நாடு இந்து மாகடலில் மிதக்கின்ற முத்து அத்துணை இயற்கை வளங்களின் சொத்து சிந்தும் நீர்வீழ்ச்சி பாடிவிடும் சிந்து அந்த நதியூரும் அழகை உற்பவித்து என்னவொரு உலகைப் படைத்தவரின் கைவண்ணம் எண்ணமெல்லாம் தாயகத்தின் நினைவுச் சின்னம் அன்றங்கு வாழ்ந்த வாழ்க்கை இன்னும் மின்னிமறையும் ஞாபகங்கள் போய்விடவே எண்ணும் கண்களைப் பறிக்கும் கடலின் நீலம் பொன்னிற மணலோ கரையோரம் நீளும் விண்ணை முட்டும் மலைகளின் கோலம் என் மண் வனப்புகளை ஆளும் சகோதரராக கூடியே வாழ்ந்தவொரு நாடு அகோர யுத்தத்தினூடே இன்று சுடுகாடு மகோன்னதத்தை மங்கவே வைத்தது அடிபாடு கைகூடி வராது இழுபறியாக உடன்பாடு ஜெயம் 10-03-2023