உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

சக்தி சக்திதாசன்

சக்தி சக்திதாசன்

ஞாலத்தின் மீதொரு பவனி வந்து - அதன் கோலத்தை பார்த்ததொரு வியப்பன்றோ ! காலத்தின் சூட்சுமங்கள் புரியாமல் மூலத்தைத் தொலைத்து விட்ட வேகங்கள் சூழலின் மாற்றங்கள் புரியவில்லை - ஏனோ சுழலுகின்ற காரணமும் தெரியவில்லை பகடைக் காய்களாக நாமே அவனியில் பவனி வருகின்றோம் பெருமையுடன் சிந்துகின்ற மணித்துளிகள் எல்லாம் - கூறும் சிந்தை மிகு விளக்கமொன்று காண்பீர் உலகினிலே முந்தி விழுகின்ற துளிகளும் கூட முடிகின்ற இடம் அதே தரைதானே ! எண்ணி, எண்ணிப் பார்க்கின்ற வேளையிலே - என் எண்ணங்களில் பூத்து நிற்கும் நினைவு ஒன்று என்ன, என்ன செய்தாலும் அது எல்லாம் எனதென்ற எண்ணம் வெறும் பொய்யே ! உள்ளமெங்கும் பூத்து மணம் வீசும் - அந்த உண்மையான உணர்வு அன்பு ஒன்றே உணர்ந்து கொள்ளும் போது நெஞ்சில் அழியாமலே உதிக்கும் அழியா உண்மையான தெளிவு சக்தி சக்திதாசன்