உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

மதிமகன்

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்: 209 07/02/2023 செவ்வாய் நிச்சயதார்த்தம் ———————- எங்கோ பிறந்த அவனுக்கும் எங்கள் வீட்டு அவளுக்கும் மங்களம் சேர்க்கும் திருநாளாம்! மகிழ்வுறு நிச்சயப் பெருநாளாம்! அவனும் அவளும் சேர்வதற்கு அத்தி வாரம் இட்டிடும் நாள்! இனமும் சனமும் ஒன்று கூடும் இனிய ஆனந்தம் தரும் நாள்! பேச்சு “எல்லாம்” சிறப்பானால் பெரியவர் கூடி நாள் பார்ப்பர்! கூச்சல்,இரைச்சல் நடுவினிலே குறித்த நாளையும் அறிவிப்பர்! தட்டங்கள் இரண்டு, கைமாறும்! தனயர்கள் மீதும் பொறுப்பேறும்! திட்டங்கள் பலவும் அரங்கேறும்! திருமண வேலையும் சுகங்காணும்! நன்றி மதிமகன்