உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

கமலா ஜெயபாலன்

கமலா ஜெயபாலன்

தைமகளை வாழ்த்துவோம் ————————————— வருவாய் தழிழ்மகளே வண்ணச் சிறப்பாய் தருவாய் நலன்பல தந்து-கருவாகும் நெல்மணிகள் ஓங்கியே நானிலமும் பொங்கிட நல்கிடுவாய் நற்சீர் நமக்கு ஏர்பிடித்தார் தந்தை எழுத்தும் அறிவித்தார் பார்போற்றப் பக்குவமாய் படிப்பித்தார் -ஏர்பூட்டி ஏழ்மை தெரியாமல் ஏற்ற உழவனாய் வாழ்வை வளமாக்கியும் வாழ்ந்து பொங்கலும் பொங்க பகலவன் தோன்றிடவும் சங்கும் முழங்கி சொந்தங்கள்-பங்கேற்கும் சுவையான நாட்களும் சுதந்திரமாய் வந்தால் இவையனத்தும் இன்பமாகும் என்று