உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

பத்மலோஜினி திருசெந்தூர்செல்வன்

பத்மலோஜினி திருசெந்தூர்செல்வன்

வணக்கம் master 🙏 வணக்கம் அதிபர் 🙏 சந்தம் சிந்தும் சந்திப்பு — 194 தலைப்பு — ஆட்டத்தை அடக்கிட வீரம் எம்மோடுள்ள ஐவர் எமக்கே எதிரிகள் வம்பை வளர்ப்பர் வில்லங்கம் விளைத்திடுவர் அம்பாய் எழுந்து இவர்களை அடக்கிட எம்மிடம் வீரம் இருந்திட வேண்டும். ஐம்புலன் ஆட்டத்தை அடக்கிச் செயற்பட்டு ஐம்புலன்களை ஒடுக்கி அறவழி நடப்பின் எம்மிடம் அமைதியாய் ஏற்றம் இணைந்திடும் நிம்மதி ஒளிவீசி நன்மை அளித்திடும். உளவுறுதி பெற்றோர் மனவுறுதி கொண்டு புலனைந்தையும் மடக்கின் புதுமை பெறலாம் வளமாய் அமைதியை விழுப்பத்தைச் சேர்க்கலாம் நலமே வாழலாம் நல்லவை நாடிவரும். நன்றி வணக்கம் 🙏 திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன் London 04/10/2022