உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Selvi Nithianandan

Selvi Nithianandan

தந்தையின் நினைவுநாளிலே காலங்கள் மெல்லென கடந்தும் போச்சுது கனதியாய் நெஞ்சமும் கருகித்தான் செல்லுதே பாலமாய் இருந்தவரும் பாதியிலே பிரிந்திடவே ஞாலத்தில் பலஉயிர்கள் தவித்திடும் நிலையன்றோ நாற்பத்து ஏழு ஆண்டும் நாடித்தான் வந்திடவே நாட்டமாய் நாமும் நல் உபாசம் இருந்திடுவோம் கால்வீக்கம்மென்று வைத்தியசாலை செல்ல கையிலே போட்ட ஊசியாலே கட்டான உடலும் கோமாவில் போக கடைசியில் உயிரற்ற செய்தி காதினிலே கேட்டதுதான் இன்றுமே என் மனதினிலே சொந்தங்கள்கூட ஓடித்தானும் போச்சு பரிவும் இல்லாது பழிகூடச் ஆச்சு பணமென்ற வேசம் ரணமாய் தானும் பகடுவாழ்வு எல்லாம் திரும்பியதேஇப்போ