உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

மதிமகன்

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் 186 23/08/2022 செவ்வாய் விடுமுறை ————— ஓடி ஓடி நித்தம் வேலையெனெ ஓயாது உழைத்துச் சோர்ந்து வாடி நிற்கும் மனமதை வருடி வைத்திடத் தேவை விடுமுறையே! நிதமாய் காணும் மனைகளின் வரிசைகள் நிழலே இல்லா பெரும்தெருக் கரைகள் விதமாய் தோன்றும் வன்மிகு செயல்கள் விடுத்துக் கொண்டிட விடுமுறை வேண்டும்! ஊருக்குச் செல்வது ஒரு தனி சுகம்! உறவுகள் தரிசனம்-அது தரும் இதம்! பாரினைச் சுற்றி நாம் வரும் வலம் பட்ட காயங்கள் ஆற்றிட வழிவிடும்! நீலநிற வானமும் நிறைமுக மதியும் நிம்மதியை மனதில் கொண்டுவரும்! பாலைவன நெஞ்சும் பசுமை பெறும்! பக்குவமாய் இதயத்தை வருடிவிடும்! அலைகடல் ஓரத்தில் அமர்ந்திருக்க அலைபாயும் நெஞ்சில் அமைதிவரும்! விளைநிலம் தனை நீ வலம்வரவே விலையில்லா மனவளம் வந்துசேரும்! உடலும் உள்ளமும் நலம் வேண்டில் உனக்கு வேண்டும் விடுமுறையே! கடலும் மலையும் கண்ட திருப்தி களைத்த மனதில் களிப்பினைத் தருமே! நன்றி மதிமகன்