உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

மதிமகன்

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் 179 21/06/2022 செவ்வாய் விருப்புத் தலைப்பு கோடை வந்தது! கோடை வந்தது! —————————————— கோடை வந்தது! கோடை வந்தது! கொள்ளை அழகுக் கோடை வந்தது! பீடை நீங்கிய பிரபஞ்சம் தெரியுது! பிஞ்சு இலைகள் பிறப்பும் காணுது! வாடை தந்த குளிரும் அகலுது! வண்ண மலர் வனப்பும் தெரியுது! ஓடை நீரின் ஒலியும் கேட்குது! ஒரே புத்துணர்வு உள்ளே பிறக்குது! ஆடை மாற்றும் ஆசை துளிர்க்குது! அழகுச் சிலைகள் ஊர்வலம் காணுது! தாடை வரையும் மறைத்து நின்றது, தாமே கொஞ்சம் கீழே இறங்குது! தோடைச் சாறுக்கும் கிராக்கி ஏறுது! தொலைப் பயணம் முனைப்புக் காட்டுது! மூடைப் பணமும் கொஞ்சம் கரையுது! மூளைக்கு சற்று ஓய்வும் கிடைக்குது! நன்றி மதிமகன்