உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master 🙏 வணக்கம் அதிபர் 🙏 சந்தம் சிந்தும் சந்திப்பு — 177 தலைப்பு — பழமை உலகெங்கும் உள்ளனர் உறவினர் என்றெண்ணி நலமான பலமான நமக்குரிய நல்லவற்றை விலக்கிவிட்டு விலகவிட்டு வாழ நினைக்காது வளமாக வாழ்விக்கும் பழமையைப் பேணுவீர் ! பொன்னகையும் போலிப் பொருட்களும் பொருளல்ல அன்பும் புன்னகையும் அளவிடமுடியா சொத்துக்கள் என்றும் இவற்றை வோண்டுவோற்கு வழங்கி மண்ணில் பழமையை மேன்மையை வளர்த்திடுவீர்! பாட்டி சொன்ன பழங்கதைப் பயன்கள் வீட்டில் கூட்டாக வாழ்ந்த நாட்கள் நாட்டில் அமைதி நமக்களித்த நன்மைகள் காட்டின பழமையின் கனிவைச் சுவையை. நன்றி வணக்கம் 🙏 திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன் London 07/06/2022