உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

மதிமகன்

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் 177 07/06/2022 செவ்வாய் பழமை ———- நேற்றைய தினத்துப் புதியது நெஞ்சு கொஞ்சம் மறந்துபோய் நினைவி லிருந்து விலகி விடின் நாளைய தினம் அது பழையதா? கொடியில் நேற்று உருவாகி கொல்லையில் இன்று பூவாகி கடிதினில் அரும் காயாகி கனியாகின் அது பழையதா? ஏணிக்கு ஒரு கால் போனால் எடுத்து வீசுவது வழமைதான்! தூணின் மேற்பகுதி தூர்ந்தாலும் தூரா திருப்பது அடித்தளமே! குளிர் காலம் ஒன்று வந்ததுமே களை யிழந்து போன தெல்லாமே துளிர் விட்டு மீள உயிர்ப்பதற்கு தூணாய் இருப்பது பழம் வேரே! புதிய தென்று நாம் கருதுபவை புதிதாய் இன்று முளைத் தவையா? பழைய ஊறலில் இருந்துதானே பக்குவம் மேலும் பிறக்கிறது! வயது முதிர்ந்ததால், உடல் வலிமை சற்று இறங் கியதால் கயவர்போல நினைத்து அவரை காலில் போட்டு கசக்கலாமா? நன்றி மதிமகன்