உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

கமலா ஜெயபாலன்

கமலா ஜெயபாலன்

தண்ணீர்க் குடத்தழகி ——————————- தண்ணீர்க் குடத்தழகி தாமரைப்பூ முகத்தழகி மண்ணின் மணத்தழகி மயக்கிடும் கண்ணழகி/ கொடியிடை அசைந்தாட கொலுசு குதித்தாட வடிவான வஞ்சியவள் வாறாளே வாஞ்சையுடன்/ தண்ணீர் சரிந்தொழுக தாவணியும் நனைந்தூற கண்மை கரைந்தோட காரிகையே பேரழகே/ சிலைபோல உன்னழகு சீண்டுதடி என்மனதை கலையாத உன்னுருவம் கண்ணிற்குள் நிற்குதடி/ வண்ணக் கிளியழகே வசந்த மலரழகே எண்ணங்கள் தோன்றுதடி என்னவளே என்மனசில்/ நெற்றி வகிடெடுத்து நீவித் தலைமுடித்து பற்றுடன் பாரேன்டி பாவிமகன் நனேன்டி/ பஞ்சுவிரல் கையழகி பவள உதட்டழகி மஞ்சள் நிறத்தழகி மச்சானைப் பரேண்டி/ இஞ்சி இடுப்பழகி இதமான கண்ணழகி பஞ்சியும் பராமல் பாய்ந்தோடி வாயேண்டி கமலா ஜெயபாலன்