உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

சி.பேரின்பநாதன்

சி.பேரின்பநாதன்

சந்தம் சிந்தும் கவிதை- 169 பட்டினி பட்டினியால் அடிவயிறு பற்றி எரியுது அக்கினியை கக்கியபடி விண்கலம் பறக்குது சந்திரனில் கால்பதித்து சரித்திரம் படைக்குது ஓருவாய் சோற்றுக்கு மக்கள் அலைகின்றபோது செவ்வாயில் வாழ்வதற்கு ஆராச்சி நடக்குது பட்டினிக்கு தீர்வின்றி விஞ்ஞானம் வளருது பார்எங்கும் பசியாலே மக்களின் உயிர் பறிபோகுது பாரா முகமாக உலகமும் பார்த்துக்கொண்டிருக்குது வயிறு கொழுத்தவர்களுக்கு என்நாளும் விருந்து ஏழையின் வயிற்றுக்கு மருந்துக்கூட உணவில்லை எட்டையபுரத்தான் எழுப்பிய குரல் எட்டவில்லை எவர் காதிற்க்கும் ஏழைகள் எழுப்பிய குரலும் கடவுளின் காதிலும் விழவில்லை ஆலயமணியின் ஓசையில் ஆண்டவனும் தூங்கியதால் உண்டியல்கள் நிறம்பி வழியுது உணவின்றி வயிறுகள் ஓட்டிக்கிடக்குது உணவை குப்பையில் கொட்டுவது பாவம் உணர்வு உள்வர்களே ஓருகணம் சிந்தியிங்கள் உள்ளத்தில் ஈரம் உள்ளவர்களே உதவிட முன்வாருங்கள் கவிதை ஆக்கம் அல்வாய் பேரின்பநாதன் லண்டன் 01-04-2022