உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஜெயம் தங்கராஜா

ஜெயம் தங்கராஜா

பட்டினி பசித்தவர் தரணியில் நிறைந்து கிடக்க  புசிப்பவர் மனமில்லை பகிர்ந்து கொடுக்க கசியாதுளம் இருப்போர்கெலாம் கைகள் முடங்க வசிக்கவே இயலாதவர் நிலவுலகம் அடங்க உணவின்றி பரிதவிப்போருலகில் சரிபாதிப் பேர்  பணங்காசை அனுபவிப்போர் மறுமீதி பார்  கணக்கிங்கே பிழைக்கின்றதே போட்டவர்தான் யார்  பிணக்கோடு இருவேறுலகம்  எளியோருலகில் ஒழியாப்போர்  சுருங்கிய வயிற்றில் வறுமைக் கோடுகள்  ஒருவேளை சோற்றுக்கே சிலுவைப் பாடுகள் இருப்பவரெல்லாம் திண்டிரைமீட்க கொண்டாடும் வீடுகள்  வறுமையும் பட்டினியுமிங்கே பெரும் சாபக்கேடுகள்  ஜெயம் 01-04-2022