உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஜெயம் தங்கராஜா

ஜெயம் தங்கராஜா

பணி  பணி செய்து கிடப்பது நல்லதொன்று தனித்தாலும் துணிந்து தொடர்ந்திடு அன்றன்று  பேருக்கென்று இல்லாது ஊருக்கென்று உலகிற்கென்று யாருக்கென்றில்லாது உனைத் தாங்கும் பாருக்கென்று   கண்முண்ணே சொந்தம் வாழாது திண்டாடலாமா உண்டு நீமட்டும் நித்தமாய்க் கொண்டாடலாமா உன்னால் முடியும் உதவிக்கரங்களை நீட்ட  உன் போல பிறரையும் நேசித்துக்காட்ட  கோவிலிலுள்ள சிலைகளிற்கெல்லாம் காணிக்கை எதற்கு  சாவின் விளிம்பிலுள்ளோரின் அவலத்தை அகற்று  எதிர்பார்ப்பு இல்லாமல் செய்வோமே முடிந்தவற்றை  எதிர்கொள்ளும் வாழ்க்கையிலே சுயநலங்கள் முடித்தவற்றை  ஜெயம் 21-03-2022