உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

மதிமகன்

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் 166 15/03/2022 செவ்வாய் ஏழ்பிறப்பும் காணா எழில்! -------------------------------- வயலோரம் குயிலொன்று -துயிலெழுந்து கூவும்! கயல்மீனும் கண்விழித்துக் -காதலியை எழுப்பும்! அஞ்சுகமும் தன்குரலில் -கொஞ்சுமொழி பேசும்! மஞ்ஞைகளும் மரகதமாம் -மரக்கிளையில் துயிலும்! கலைமானின் மருள்விழிகள் -காவியங்கள் கூறும்! தலைமீது கவர்க்கொம்பு -தற்காப்புச் செய்யும்! மலர்மீது வண்டினமும் -மாயவலை வீசும்! குலமகளாம் அவள்மீது -வீழ்ந்து இசைபாடும்! தவளையும் தம்குரலில் -தம்பூரா மீட்கும்! குவளையும் இதழ்விரித்து -குவலயத்தை ஈர்க்கும்! மலையோரம் மா நதியும் -மகிழ்வாய் நடமாடும்! அலைபாயும் ஆழ்கடலும் -அருமுத்துக் குளிக்கும்! எழிலான இயற்கையவள் எழில்நடனம் புரிவாள்! ஏழ்பிறப்பும் காணவொணா -எழிலதனைத் தருவாள்! நன்றி மதிமகன்