உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

அபிராமி கவிதாசன்.

அபிராமி கவிதாசன்.

08.03.2022 சந்தம் சிந்தும் சந்திப்புக்காக… “திமிர்” திமிர் உன்னுள் சிக்குண்டால் திமிருதல் கடினமே உமிழும் சொற்களும் உதவாது சிதறுமே / ஆணவம் நம்மை ஆட்க்கொள்ளும் தருணம் வேதனை வார்த்தை வில்லம்பாய் பாயுமே / சோதனைக் காலமாய் சொல்லதனை ஏற்றுமே சாதனை படைக்குமே சாதூரிய பொறுமையே / நடையும் உடையும் நடத்தையின் முறைமையும் ஆணவக் குணத்தினை அடிக்கோடிட்டு காட்டுமே / கர்வம் வைத்தே காத்திருக்கும் இருதயமே சர்வ அதிகாரமும் சாமத்தியம் என்றெண்ணாதே / அகங்களும் அழகல்ல அன்பியம் அழகாகும் சுகமான இதயங்களே சுதாரிப்பீர் சூழ்நிலையை / நன்றி பாவைஅண்ணா🙏