உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Jeyam

Jeyam

திமிர் பொய்யாக வேடம் போட்டு நடிப்பவர் இடையில்  மெய் பேசி உலவுகின்றேன் திமிரான நடையில் பிழையாய் நினைத்து விடுவாரோவென வாழ்வதோ பயந்து  பிழை விடாது வாழுகின்றேன் செயல்களாலே உயர்ந்து  யாரோடு என்றாலும் மனதிற்பட்டதை பட்டென பேசுகின்றேன்  ஊரோடுநான் ஒத்துப்போகவில்லை எனக்கூறுவோரால் கூசுகின்றேன்  நான் செய்வது பிடிக்காவிடின் முகத்திற்குமுன்பாக கூறலாம்  தான்தனக்குள் தவறான புரிதல் இப்படி யார்யாரெலாம்  என்னையடக்க நினைப்போர்க்கு மனதிலேனோ பட்டது கறை தன்மானத்தை இழக்காது வாழ்கின்றேன் இதற்குள்ளேயேனோ ஒருகுறை  கட்டுப்பாடுகள் போட்டு என்னை அடக்கிக்கொள்ள முடியாது  திட்டம்போட்டு கவிழ்க்க நினைப்பினுமென் திமிர் படியாது  ஜெயம்  06-03-2022