உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

அபிராமி கவிதாசன்.

அபிராமி கவிதாசன்.

சந்தம் சிந்தும் சந்திப்புக்காக தலைப்பு ! “அன்பின் பங்கு “ 15.02.2022 ஆதி அன்பே அன்னை ஆவார் பாதி அன்போ தந்தை ஆவார் / அண்ணன் தம்பி அக்காள் தங்கை வண்ண அன்பை வாகை சூடி/ எண்ணமெங்கும் ஏற்பாள் உறவை திண்ணமாக மிளிரும் தீபம் ஓளியாக / கண்ணில் கணவர் கருத்தில் வைத்து வண்ண வாழ்வில் வாகை சூடி/ பந்தி போட்டு பகுந்து அளிக்க பங்கு கேட்டு பிள்ளை நிற்க/ பிறந்த வீடும் புகுந்த வீடும் துறந்த அன்பால் துவள்வாள்பெண்மை/ சுற்றம் உறவுகள் சூழும் நட்பும் வெற்றி பெற்றிட விடிவு தருமே / அன்பாய் ஒன்றை அளிப்பாள் பரிசாய் நன்றென்றே வாழ்வினில் நயம்பட வாழ்வாள் / நனிநன்றிகள் பாவை அண்ணா 🙏