உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Jeyam

Jeyam

முதுமையின் நிகழ்ச்சிகள் முதுமை வந்து மண்வாழ்வை மொய்த்திடுமே புதுமையென்று மெய்த்த இளமை பொய்த்திடுமே  தோலும் சுருங்கி தோற்றம் உருக்குலைந்திடுமே  மேலும் தளர்ந்து முதுகுவளைத்து உலவிடுமே  அடி எடுத்துவைக்கத் தடியும் வேண்டும்  நொடிகள்பல போனபின்பே ஒருமுழந் தாண்டும்  கொஞ்சத்தூரம் நடந்தாலே மூச்சு வாங்கும்  மிஞ்சிவிடும் கனத்தால் கால்முட்டிகளும் வீங்கும் வருத்தங்கள் வந்து தொல்லைகள் கொடுக்கும்  உறுத்தும் நினைவுகள் உறக்கத்தைக் கெடுக்கும்  மலமும் சலமும் சொற்கேளாது தானாகப்போகும்  பலமும் குறைந்த வயோதிபம் நகைப்பிற்கிடமாயாகும்  அடக்கிவிடவே ஆட்டத்தை மூப்பும் வந்துசேரும்  முடக்கியே தனிமைப்படுத்தும்  பார்க்கமாட்டார் யாரும்  உறவாட உறவுகளைத்தேடி உருகியுயிர் துடிக்கும்  இறக்குமுன்பே முதுமை துயரங்களைப் படிக்கும்  ஜெயம் 05-02-2022