உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Jeyam

Jeyam

காதல் கைகூடுமோ இதயத்துள் ஆனந்த உத்தரிப்பு  புதுவித உணர்வதன் உச்சரிப்பு  எதற்காகவிந்த புதுத் துடிப்பு  அதுதந்ததென்ன வாழ்க்கையில் பிடிப்பு  எனக்குள்ளே ஏனிந்த மாற்றங்கள்  மனதிற்குள் மகிழ்ச்சியின் ஏற்றங்கள்  ஒருதரந்தானே அவளைப் பார்த்தேன்  நிரந்தரமாகவேன் நினைவுள் சேர்த்தேன்  யாரவள் விழிகளிற்கேன் பட்டாள்  பேரழகியவள் என்னுயிரையும் தொட்டாள்  மனக்களிப்பில் தனியாகச் சிரிக்கின்றேன் தினந்தினம் என்னென்னமோ புரிகின்றேன்  கொள்ளையடித்தவள் என் மனதை சொல்லவருவாளோ தன் மனத்தை  கொண்டகாதலும் அவளால் நிறைவேறுமோ கண்ட கனவுகளெல்லாம் கைகூடுமோ  ஜெயம் 28-01-2022