உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Jeyam

Jeyam

பரவசம் இல்லறம் என்னும் இன்பச் சோலையிலே உள்ளங்கள் இரண்டு களிக்கும் வேளையிலே  காதலலைப் பேணும் மேனிகளிற்கங்கு பரவசமே  ஆதலால் பேரின்ப சொர்க்கம் அவர்வசமே  அழகான அர்த்தங்கொண்ட வாழ்க்கை நகர்வு  வளங்கொண்ட அன்பதை தினம்தினம் பகிர்வு  ஆண்டுகள் நகர்ந்து உயர்த்திக்கொண்டாலும் அகவை தோன்றியே வாழ்விலின்னும் கூடுகட்டுது உவகை  ஜீவனுக்குள் ஜீவன்சேர்த்து வாழுகின்ற கலை தேவனும் தேவியும் காட்சிதருவதான நிலை நாளும்பொழுதும் மகிழ்ச்சியால் அகங்கள் பொங்குமே  வாழும்வரைக்கும் மொத்தமாய் சுகங்கள் தங்குமே  ஜெயம் 24-01-2022