உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

அபிராமி கவிதாசன்.

அபிராமி கவிதாசன்.

சந்தம் சிந்தும் சந்திப்புக்காக.. 18.01.2022 பாமுக பூக்கள் பாரினில் பாக்கள் பூமுகம் மலர்ந்திட பூத்ததே ஆக்கமொன்று சந்தம் சிந்தியதே சாதனை படைத்ததே சொந்த நூலாகி சுவர்க்கத்தில் சேர்த்ததே முத்தான சொத்தாகி முதல் பூக்கள் பூத்தன வித்தாகி பாமுகத்தில் விளைந்தே சொரிந்தன வாரம்தோறும் வாழ்த்துவாகை வகைவகையாய் சூட்டியே தோரணக் கோர்வைகள் தோப்பாகி நின்றன அர்ப்பமென எண்ணியவை அதிசயமாய் நிகழ்ந்தன கர்ப்பமான கனவுகள் கரம்வந்தே மகிழ்ந்தன பூவிலகில் பூத்திட்ட புன்னகை பூக்களே மூவுலகும் போற்றிடும் முதன்மை பாக்களே அதிபருடன் கவிப்பாவை அண்ணாவின் பெரும்பங்கில் கதிரென விளைந்தே களத்தில் நிறைந்தன.. நன்றி வணக்கம்🙏