உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

மறவர்குலத்தின் மாதரசி.....

மறவர்குலத்தின் மாதரசி.....

ரஜனி அன்ரன் (B.A) மறவர்குலத்தின் மாதரசி.....08.10.2026 முத்துக்கள் நிறைந்த தீவாம் எழில்கொஞ்சும் மன்னார்த்தீவில் மண்ணிற்கும் பெண்ணினத்திற்கும் பெருமைசேர்க்க மண்ணிற்காய் மலர்ந்தமலரே மறத்தின்மறுவடிவே பெண்ணும் போர்க்களம் புகுவாளென்று மண்ணில் பொறித்த தீப்பொறிநீயே ! நிமிர்ந்தநடையும் நேர்கொண்ட பார்வையும் விடியலின் ஆயுதமென்று உணர்ந்து வீறுநடைபோட்டு கோப்பாய் மண்ணில் நேருக்கு நேராகமோதி மண்ணிலே சாய்ந்துவிட்ட மண்ணிற்குள் விதையான முதல்மாதரசியே புரட்சியின் விதையாக நீவிழுந்த அக்டோபர் பத்து ஈழப்பெண்கள் எழுச்சி நாளாச்சு ! காந்தழ்ப்பூக்கள் மலரும்முன்னே காற்றினில் கலந்திட்ட முதல்ச்சுடரே பெண்ணினம் அடிமை இல்லையென்று குருதியால் வரலாறு எழுதிச்சென்றாய் மாலதியெனும் வீரப்பெயரே – என்றும் மறவர் படையணியின் தாரகமந்திரமாம் ! https://www.youtube.com/watch?v=cpbs3IIS_mo