உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

எழுச்சிப்பெண்…2401

எழுச்சிப்பெண்…2401

எழுச்சிப் பெண்!! வியாழன் கவி-2401 மாலதி என்றொரு அழகிய நாமம் மலர்ந்தது மண்ணில், சுதந்திர வேட்கை தாங்கி! இன விடுதலைப் போரிலே முதல் களப்பலியான சகாயசீலியாய், தன் தேசத்தின் விடுதலைக்காய் உயிரினைத் துச்சமாய்த் தந்த வீரமங்கை இவள் வரிப்புலி ஆடை அணிந்து, தோள்களிலே துப்பாக்கி ஏந்தி, தன் உயிரை மண்ணுக்காய் தானம் தந்து வரலாறானாள்! தமிழீழப் பெண்களின் எழுச்சியின் நாளாம் அக்டோபர் பத்திலே, அனைத்து இதயங்களும் அந்த வீரப் பெண்ணை நன்றியோடு நினைந்து கைகூப்பி வணங்குகின்றன! குட்டக் குட்டக் குனிவதெல்லாம் பெண்மையின் பண்பல்ல; தக்க தருணம் வந்தால் தலைநிமிர்ந்து, துணிச்சலோடு நின்று ஆற்ற வேண்டிய காரியங்களை ஆளுமையோடு செய்பவளே எழுச்சிப் பெண்! இத்தரை மீதிலே இவளைப் போல எண்ணற்ற எத்தனையோ மங்கையர் மாதவம் செய்து, மண்ணுக்காய் உயிர்தந்து, வரலாற்றில் தடம் பதித்தனர்! அவர்தம் தியாகம் என்றென்றும் வாழட்டும்; அவர்தம் நினைவு எம் நெஞ்சங்களில் என்றும் நிலைத்திருக்கட்டும்! சிவதர்சனி இராகவன் சுவிட்சர்லாந்திலிருந்து 8/10/2026