உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

அறிவுக் கண் திறந்த தியாகிகள்”

அறிவுக் கண் திறந்த தியாகிகள்”

நேவிஸ் பிலிப் கவி இல(667) அன்பெனும் ஒளியாகி ஆர்வத்தீயை அகத்தில்மூட்டி இருள் நீக்கும்ஒளியென இயலாக் கனவினையும் நனவாக்கி வாழ்வில் மதிப்பை வளமாய் சேர்க்க நற் பண்பென்னும் விதைகளை நெஞ்சில்விதைத்து ஒழுக்கம் நேர்மையெனும் சீரிய குணங்களை எமக்கூட்டி எம்மை செதுக்கி எடுத்த சிற்பிகள் மனதின் சுமையை மகிழ்வாக்கி பள்ளிப் பருவத்தை பரவசமாக்கி பயிலும் பாடத்தை பாசமாய் கற்றுத் தந்த பண்பாளர்கள் சலிப்பில்லா முகத்தில் என்றும் புன்னகை மலர்ந்திருக்க பிழைகளைத் திருத்திடும் பண்பும் கொண்டு இனிதாய் கற்பித்து இதயத்தில் நிறைந்திருக்கும் தியாகிகளை நன்றியோடு போற்றிடுவோம். நன்றி,,,,,,