உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

நம் வாழ்வின் வேர்கள்

நம் வாழ்வின் வேர்கள்

சக்தி சிறினிசங்கர் தூணாய் இருந்தவர் தூக்கியே விட்டவர் வீணாய்ப் பொழுதை விரயமும் செய்யார் காணப் பொருளாய்க் கடவுளால் ஆனவர் பூணாய் இருந்தவர் புவிதனில் வேர்களே! நேர்மை காத்து நெறிமுறை வழுவா கூர்மை அறிவிலே குடும்பம் காத்தவர் பார்போற்ற பரம்பரைப் பட்டியல் நீளச் சார்ந்திருந் தவர்கள் சாதுரியம் மிக்கவர் ஆழமாய் வேரூன்றி ஆலும் தழைத்து வாழப் பக்க வாட்டில் துணைவேர் பலமும் கொடுத்துப் பரந்து விரிந்து நிலத்தில் நின்று நீளும் கிளைகளில் விழுதுகள் தோன்றி வீழ்ந்திடா வண்ணம் நழுவி விடாமல் நாளும் தாங்குதே புயலும் மழையும் புரட்சி செய்தும் அயற்சி இல்லா அருமைப் பணியில் தாங்கி நிற்கும் தத்துவம் தகுமே!