உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

நம் வாழ்வின் வேர்கள்-2397

நம் வாழ்வின் வேர்கள்-2397

நீர் தேடி ஓடும் வேரைப்போல, நாம் பேர் தேடி ஓடுகின்றோம்; மூத்தோர் தந்த சீர்மிகு பெயரில் சிறப்பதுவே நம் பெருமையன்றோ? வேரூன்றிய உலகில் நான் பார்க்கும் போற்றுதலுக்குரிய இடங்களெல்லாம், மூத்தோர் பரம்பரையாய் வாழ்ந்த மண்ணையும் பண்பாட்டையும் சொல்லுமே! வேரறுந்து போகாமல் நம் சந்ததியைத் தேடி இணைக்க வேண்டும்; தேடித் தேடி முகவுரை கண்டெடுத்தால் புதையலாகும் நம் வரலாறு! பேரொன்று நமக்குத் தந்து, பெருமையாய் உலகறியச் செய்து, இருந்த இடம் தெரியாமல் இன்று இன்னலுறும் நிலை ஏன் வர வேண்டும்? நமக்குள் முகவரி இழந்துபோவது நம் வரலாற்றின் முடிவுரையாகும்; வேரைத் தேடி நின்றிடுவோம்— வேரோடு வாழ்வதே நம் பெருமை! சிவதர்சனி இரா 30/9/2026