உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

“மொழியே முகவரி”

“மொழியே முகவரி”

நேவிஸ் பிலிப் கவி இல(658) “அ “என்ற முதல் எழுத்தே தமிழ் மொழியின் முகவரியாய் கல்லும் மண்ணும் தோன்றாக் காலத்தே நல் வழி காட்டிய தாய்மொழி அன்னையின் தாலாட்டில் கேட்டு மூத்தோரின் பழமொழி வழி நன்நெறிகள் கற்றுத்தந்த உயிரான செம் மொழி அழியாப் புகழ் கொண்ட அமுத மொழி அறிஞர்கள் போற்றும் அகிலமே வியக்கும் இலக்கண இலக்கிய வடிவம் தமிழ் மொழியின் தனிச் சிறப்பாய் எட்டுத் திக்கும் திசை மாறி கண்டங்கள் தாண்டி தேசங்கள்கடந்து வேற்று மண்ணில் வாழ்ந்தாலும் கம்பீரமாய் உயர்த்தும் அடையாளமே என் தாய் மொழி தமிழ் யுகங்கள் கடந்தும் இளமையோடும்்இனிமையோடும் வாழும் தமிழ் மொழியே முகவரியாம்