உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

ராணி சம்பந்தர் பணம் என்றால் பிணமும் வாய் பிளந்தே திறக்குமே திறக்கும் பை நிரம்பினால் நினைவிலும் கனவிலுமே பல நன்றிகள் பிறக்குமே உறவுகளிற்கு ஊட்டி ஊட்டி நாடி நரம்பு சுருண்டு சலிக்க ஒன்றாய்ப் பிறந்தவைகள் கறந்து பட்டபாடு கை ,கால் வலிந்து நறுக்குமே தொட்டில் பழக்கம் சுடுகாடு தட்டில் வாங்கி வழக்கமாயிட துட்டில் தேங்க உழறிய பொய் பிரட்டுகள் தூங்கி அறுக்குமே வேட்டு வைக்கும் கோட்டுப் போட்ட வெவ்வேறு புதுப்புது யோசனைகள் கோயில் கிணறு வெட்ட, மலசலகூடம் கட்ட எனக் கறக்கும் வழிகளில் சிக்கிய எம்மவர் இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு என்பது விடை காணா ஒன்றே .