உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

அழகின் மகிமை

அழகின் மகிமை

நகுலா சிவநாதன் அழகின் மகிமை பசுமை போர்த்திய மலைகளிலே பனித்துளி பேசும் பாலி… நீலக் கடல் அலைகளிலே நிலவொளி ஆடும் பாலி! தென்னை மரம் தாலாட்ட, தென்றல் வந்து முத்தமிட, நெற்பயிர்கள் தலைவணங்கும் நெஞ்சைக் கவரும் பாலி! நீர்வீழ்ச்சி இசைபாட, நதியோடு இயற்கை ஓட, மலர்களெல்லாம் மணம் வீசும் மாய உலகம் பாலி! சூரியன் கடலில் மறையும் செந்நிற மாலை நேரம், வானமும் கடலும் சேர்ந்திடும் வண்ண ஓவியம் பாலி! கோயில்களின் மணி ஓசை, கலாசாரத்தின் இனிய வாசம், அன்பு நிறைந்த மனிதர்களோடு அழகாய் சிரிக்கும் பாலி! நகுலா சிவநாதன்1871