உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

நான் யார்

நான் யார்

கவிதை 815 கண்ணாடி காட்டுவது ஒன்றை உலகம் காட்டுவது வேறொன்றை உறவுகள் காட்டுவது இன்னொன்றை இவையெல்லாம் காட்டும் நான் யார் நேற்று இன்று நாளை மூச்சின் கொடையால் வாழ்க்கை வருவதற்கு முன் எங்கிருந்தேன் போனபின் எங்கே செல்வேன் புன்னகைக்குள்ளும் நான் புதைந்தேன் கண்ணீரிலும் நான் குளித்தேன் வெற்றியிலும் நான் மிளிர்ந்தேன் தோல்வியிலும் நான் சிதைந்தேன் நான் பிறந்த இல்லம் நான் வளர்ந்த ஊர் நான் பயணித்த பாதை இல்லை அனுபவங்களின் தொகுப்பே நான் ஜெயம் 26-08-2026