உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

முயற்சி தரும் பயிற்சி......

முயற்சி தரும் பயிற்சி......

ரஜனி அன்ரன் (B.A)...முயற்சிதரும் பயிற்சி... 20.08.2026 முயற்சியென்பது முதல்படி தான் பயிற்சியென்பது தொடர்கதை தான் விடாமுயற்சி தொடர்பயிற்சி - தருமே வெற்றியெனும் இலக்கின் உச்சம் விதியென்று நொந்து நொடிந்து போகாது மதிகொண்டு முயற்சியே பலமென்று வாழ்ந்தால் அதிபதி ஆகலாம் அகிலத்தை ஆழலாம் முயற்சியின் முனைப்போடு ! உளி தொடாமல் பாறைகள் எதுவுமே அழகிய சிலையாய் மாறியதில்லை சுடும்தணலில் தன்னை எரிக்காமல் தங்கமும் அழகிய ஆபரணமாய் ஆனதில்லை தொடர்பயிற்சி செய்திட்டால் முயற்சியை தொட்டிடும் உயரமும் தொலைதூரமில்லை ! விடாமல் முயன்றிடு தினமும் நீ தொடர்பயிற்சியையும் செய்திடு நீ வெற்றிக்கனியை எட்டியே பறித்திடலாம் தோல்விகள் மாறுமே பாடமாய் ! https://www.youtube.com/watch?v=okDt2iTDHec