உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

“தாதியர் தினம்”

“தாதியர் தினம்”

நேவிஸ் பிலிப் கவி இல(641) வெண்ணிற மல்லிகை ஒன்று பண்பு நெறிகள் நெஞ்சில் கொண்டு பிறர் அன்பில் ஆர்வம் தூண்ட எழுத்தாள் விளக்கேற்றி விழுப் புண்கள் ஆற்றிய சீமாட்டி புளோறன்ஸ் தாய் வழி வந்த சேவகிகள் உயுரோடு உறவாடும் தாதியர்கள் இரவிலும் மூட மறுக்கும் விழிகளோடு அயராது சேவையாற்றும் தேவதைகள் தியாகத்தின் இருப்பிடம் இவர்கள் கரங்களும் ஔடதம் பேச்சில் துளிர்க்கும் நம்பிக்கை உயிர் மூச்சைப் பிடிக்கும்அன்பின் கை இவர்கள் பணிகள் நாளும் சிறக்க பிணிகள் தூரப் பறக்கும் அன்புச் சேவையில் பூக்கும் தாதியரை நெஞ்சம் நிறை நன்றியோடு போற்றிடுவோம் நன்றி.