உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

அவர் ஒரு வாழ்க்கை தத்துவம்

அவர் ஒரு வாழ்க்கை தத்துவம்

ஆயிரம் நட்சத்திரங்கள் நடுவில் அப்பா ஒரு நிலவு ஆயிரம் உறவுகளுக்கு மத்தியில் தந்தையை போலில்லை ஓர் உறவு அவர் பேசிய அந்த சொட்டு வார்த்தைகளே என் வாழ்க்கையை கட்டியது பொறுப்பு அர்ப்பணிப்பு தியாகம் என்பவற்றிற்கு அவரே உயிரூட்டியது தாயின் அன்பில் நனைந்திருந்தாலும் தகப்பனின் அன்புக்குள் மூழ்கினோம் பிள்ளைகளின் கனவே தன் கனவென நினைக்கும் பிறப்பு தான் காணாதவற்றையெல்லாம் தன் குழந்தைகள் காணவேண்டியே தவிப்பு கொடிய காலம் அந்த உழைப்பின் கோலத்தை சரித்திருந்தாலும் இன்று நான் காணும் வெற்றிகளிலெல்லாம் அவர் வியர்வையும் கலந்திருக்கின்றது. ஜெயம் 25-06-2026