உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

கரைதலும் புரிதலும்……..

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய் வாழ்வு நிலையில்லை என்றுணர்ந்தும் நிச்சயமாய் எண்ணி -நிதம் கபட நாடகத்துள் வெற்றி கொள்ள சூட்சுமங்கள் வகுப்போம் வள்ளலெனச் சொல்வோம் வகைவகையா்ச் சுருட்டி -பிறர் நலிவடையும் நொடியினில் -எம் பெட்டகங்கள நிறைப்போம் பாவச்சுமை காவி-அங்கு நிலைபெறுதலுக்கா ஓட்டம் புரிந்தெழுந்து அவை நடந்து அன்பினிலே நிலைப்போம்