உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

குமுதினிப் படுகொலை - 90, 41ஆம் ஆண்டு நினைவு

குமுதினிப் படுகொலை - 90, 41ஆம் ஆண்டு நினைவு

ஜெபா ஸ்ரீதெய்வீகன் - கனடா 15-05-2026 ஆழி சூழ்ந்த நெடுந்தீவு தன்னில் வாழி எனப் புறப்பட்ட குமுதினி குருதி தோய்ந்த கொடுவாள் வீசி ஒருவர் அன்றி முப்பத்தாறுயிரை கொஞ்சமும் இன்றி கருணை அற்று நெஞ்சம் பிளக்க நேசம் இழக்க ஆண்கள் பெண்கள் மழலைகள் என்றே மாண்பிலா மாந்தர் மனிதம் சிதைத்தார் குற்றுயிர் உடல்கள் குருதியில் மிதக்க உற்றார் அழுத ஒலிவிண் அதிர இற்றை நாளொரு நரக நாளே வெற்றி என்றே வெறிநாய் சிரிக்க துறைமுகம் உதிரத்தில் உறைந்ததுவே பனை தென்னை பரிதாபமாய் பார்த்ததுவே குதிரையும் பசுக்களும் குமுறித் துடிக்க அதிர்வினில் கடலலை சிவந்து நிற்குதே