உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

பெருவலி சுமந்த பேரிடர்......

பெருவலி சுமந்த பேரிடர்......

ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026 மேபதினெட்டு மேதினியின் கரிநாள் பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள் வெறும் நினைவுநாள் அல்ல சொற்களால் விபரிக்க முடியாதநாள் உணர்வின் வலிகளை உணர்த்திடும்நாள் வலிகளின் வரலாற்றுப் பதிவேடிது ! கண்ணீரும் செந்நீரும் ஆறாகப்பாய உண்ணீரும் இன்றித் தவித்தஉறவுகளை நந்திக்கடலே சாட்சி சொல்லும் நடந்தது என்னவென்று நறுக்கென உரைக்கும் ! எரியும் நினைவுகளின் சாட்சியாக சொல்லும் கதைகளோ ஆயிரமாயிரம் கதறிய குரல்கள் காற்றில்கரைய சிதறிய உடல்கள் மண்ணில்புதைய உறவுகளின்றி அநாதைகளாகி உயிரைத்தவிர இழந்தோம் அனைத்தையும் சிதறியது உயிர்கள் மட்டுமல்ல எம்வாழ்வின் கனவுகளும் வேர்களுமே பெருவலி சுமந்த பேரிடர்இதுவே ! https://www.youtube.com/watch?v=cXq5tMKJ00s