உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

" தேனிசை வேந்தன் "

" தேனிசை வேந்தன் "

ரஜனி அன்ரன் (B.A) " தேனிசை வேந்தன் " 30.04.2026 தமிழுக்காய் முழங்கிய தேனிசைக்குரல் தமிழின விடியலுக்காய் கூவியகுரல் மண்வாசனையோடு புரட்சிக் கானங்களை இசைத்து ஈழக்கனவை உலகறியச் செய்தகுரல் ஈழவிடியலுக்கு இசையினைச் சேர்த்தகுரல் விண்ணுலகம் சென்றதுவே காற்றோடு காற்றாக ! உம்புரட்சி கீதங்களில் அகதிஇனத்தின் வலியைக் கண்டோம் மண்ணின் வீரச்செறிவைக் கண்டோம் மரணபயத்தையே மறக்கவும் கொண்டோம் எதைச்சொல்ல எதைவிட அத்தனையும் முத்துக்களே ! தேனிசையின் சகாப்தம்ஒன்று மெளனித்தது விடியல்தீயை மூட்டியஇசை கலந்தது விண்ணோடு தலைமுறைக்கு தமிழ்ப்பற்றை ஊட்டிய தேனிசை வேந்தன் நிரந்தர அமைதி கொண்டாலும் ஈழக்காற்றில் என்றும் இசையாய் கலந்து தமிழினம் உள்ளவரை உம்தேனிசையும் ஒலிக்குமே ! https://www.youtube.com/watch?v=aDuUbuHzKew