உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

முன்னூறாய் முகிழ்ப்பு

முன்னூறாய் முகிழ்ப்பு

வசந்தா ஜெகதீசன் முன்னூறாய் முகிழ்ப்பு.. திறமையின் தேடல் திசையெங்கும் விரவும் தீர்வுகள் எட்டிய திருப்பங்கள் நிகழும் சமூகத்தின் சாளரம் சார்ந்தே கருத்துகள் சாதித்த திறன்களில் உயர்ந்திடும் மனிதர்கள் கற்றவை பெற்றவை பகிர்தலில் உராயும் முற்றத்துமலர்கள் முன்னூறாய் முகிழும் அரும்பிய மலர்கள் ஆக்கிய தொகுப்பு அயராது தொடர்கின்ற தொகுப்பின் வியப்பு பயனுறு தேடலில் பாரெங்கும் அழைப்பு பற்பல திறமைகள் அறிந்த வியப்பு மூத்தோர் தகமைக்கு முதன்மை நிறைத்து காத்திடமாகும் காலத்தின் பதிவு பாமுகத் தளமே பதியத்தின் விதைப்பு தொகுத்தே தொடரும் தொகுப்பாளர் சாந்தினி விடா முயற்சியே வெற்றியின் தொடுகை மனதார வாழ்த்தியே மகிழ்கிறோம் -நாம் உயர்வாகி உன்தொடுகை ஆயிரமாய்மிளிரும். நன்றி