உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

" சிறப்புக் குழந்தைகள் "

" சிறப்புக் குழந்தைகள் "

ரஜனி அன்ரன் (B.A) " சிறப்புக் குழந்தைகள் " 02.04.2026 சித்திரைத் திங்கள் சிங்காரத்திங்கள் சிறப்புக் குழந்தைகளைப் போற்றிடும்திங்கள் சிறப்புக்குழந்தைகள் தினமாம் சித்திரை இரண்டு சீராய்த்தந்தது ஐ.நா.மன்றும் விழிப்புணர்வை ஊட்டிடவே சீர்தூக்கிப் பார்த்திடுவோம் சிறப்புக்குழந்தைகளை ! ஓட்டிசமென்பது நோயல்ல குறைபாடுமல்ல தனித்துவமான மூளையின் செயற்பாடு மூளையின் அதீதவளர்ச்சியின் மாற்றுத்திறன் புரிதலும் வழிகாட்டலும் அரவணைப்பும் இருந்தால் சிறப்புக் குழந்தைகளை சிகரம்ஏற்றிடலாம் தொடர்பயிற்சியே முன்னேற்றத்திற்கு வழி ! கள்ளம் கபடமில்லா பட்டாம்பூச்சிகள் வெள்ளையுள்ளம்கொண்ட வித்தகர்கள் இவர்கள் வேற்றுமையானவர் அல்லர் தனித்துவமானவர் நூறு வண்ணங்களின் நூணுக்கமான சித்திரங்கள் அதிவிவேகம் கொண்ட கலைவிற்பன்னர்கள் பரிதாபங்கள் தேவையில்லை அவர்களுக்கு புரிதல்கொண்ட புன்னகையே போதும் ! https://www.youtube.com/watch?v=AcJttOUd0Tc