உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

" மாதரின் மறுபக்கம் "

" மாதரின் மறுபக்கம் "

ரஜனி அன்ரன் (B. A) ..." மாதரின் மறுபக்கம் " 12.03.2026 மாதர்சக்தி மாபெரும்சக்தி மாட்சிமை மிக்கது மாதர்மாண்பு அன்பு பொறுமை அடக்கம் நேர்மை அத்தனையும் மாதர்மாண்பே மனுக்குலத்திற்கு பலபக்கங்கள்போல் மாதருக்கும் மறுபக்கமென ஒன்றுஉண்டே ! அன்புகாட்டினால் அவளொரு நூலகம் அவளை அடக்கிப் பார்த்தால் போர்க்களம் மென்மையென்பது அவள் குணமல்ல மேதினி கொடுத்த முகமூடி சரியென்று தலையாட்டும் மெளனத்தின் பின்னே முடியாதென்று முழங்கும் எரிமலையும்அவளே ! பூவிலும்மெல்லிய பூவையவள் பொறிதட்டினால் குமுறிடுவாள் பேரலையாய் சமூகத்தின் பார்வையில் அவள்மெல்லினம் சவால்களின் மத்தியில் அவளோவல்லினம் தியாகத்தில் தனையுருக்கும் மெழுகுவர்த்தியல்ல இருளைவிரட்ட தன்னையேஎரிக்கும் சக்தியும்அவளே மொத்தத்தில் மாதர்இதயம் ஒருமறைக்கப்பட்ட காவியமே ! https://www.youtube.com/watch?v=V7IxrxyY_hA