உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

முடிவில்லாத் தொடக்கம் 84

முடிவில்லாத் தொடக்கம் 84

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 05-02-2026 வாழ்வு முடிவில்லாத் தொடர்ச்சி வலிகளும் இன்பமும் வளைந்து நெளிந்து வட்டமிடும் சுழற்சி முடிந்து விட்டதென மூடிவைத்த புத்தகத்தை புதியதொரு தளிர்க்கரம் புன்னகையோடு புரட்டுகிறது அத்தியாயம் மாறலாம் அனுபவம் கூடலாம் முற்றுப்புள்ளி இடலாம் மீண்டும் முகவுரை தொடரலாம் இன்றைய துயரம் நாளைய அனுபவம் வாழ்வின் பொருளோ முடிவில்லாத் தொடக்கம்.