உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

“நிழலாடுதே நினைவாயிரம்”

“நிழலாடுதே நினைவாயிரம்”

நேவிஸ் பிலிப் கவி இல 558 நெஞ்சில் வரைந்த வண்ணங்களாய் வெஞ்சினம் அறியா பிஞ்சு வயதினிலே கஞ்சத்தனமில்லா அன்பினை நிதம் சுவைத்து கொஞ்சி மகிழ்ந்தன கரங்களில் பொம்மைகள் சோலையிலாடும் மலரிடையே இலைகளில் மறையும் பட்டாம் பூச்சியதை விழுந்து பிடித்தே பறக்க விட்ட நினைவுகள் இன்னும் நிழலாடுதே கடலோர மணலிலாடி தடம் பதித்தும் அழித்தும் விளையாடி உடல் சிலிர்க்க மனமினிக்க உணர்வினில் கலந்த நாட்கள் மறந்திடுமோ கற்றிடும் பாடங்கள் நடுவேயும் கேலியும் கூத்தும் களை கட்டும் நாட்டிய நாடகம் அரங்கேறும் மனதினில் மகிழ்ச்சி குடியேறும் காலங்கள் கடந்தாலும் இன்றும் நினைவினிலாடுதே நினைவாயிரம் நிறைவேறா ஆசைகள் எத்தனையோ அத்தனையும் நெஞ்சுக்குள்ளே பொதிந்துள்ளேன் பொக்கிசமாய் சொல்ல இன்னும் ஏராளம் சங்கதிகள் இருக்கு தாராளம் நன்றி………….