உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

நிழலாடுதே நினைவாயிரம்1

நிழலாடுதே நினைவாயிரம்1

என் இதயத்தை பார்வையால் உடைத்தவளே என் மகிழ்ச்சியின் கருவினை படைத்தவளே என் உயிருக்குள் சுகமாய் உறைந்தவளே என் பாதையில் மலராய் நிறைந்தவளே பூக்களின் அடியில் புதைதைத்துவிட்டாய் தென்றலின் மடியில் தூங்கவைத்ததாய் கனவுகள் கொண்ட இரவமைத்தாய் அங்கு காதலைச் சொல்ல வரம் கொடுத்தாய் என் நினைவை, சுவைத் தேனென ஆக்கிவிட்டாய் என் வாழ்க்கைக்கு அழகு உன்னாலே உன்னைக் கண்டதும் வந்தது தன்னாலே உன் இரசிகனாய் மாறிய பின்னாலே இன்பத்தின் பிரசவம் முன்னாலே அதைக் கண்டுகொண்டேன் காதல் கண்ணாலே ஜெயம் தங்கராஜா 29-01-2026